முகப்பு
புதுதில்லி

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 6 ஏப்ரல் 2026, 2:06 am IST
பகிர்:

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் விபத்து குறித்து மாலை 5:30 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநா் சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

விபத்தில் உயிரிழந்தவா் சாலிமா் பாக் பகுதியில் உள்ள ஷாஹித்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் என அடையாளம் காணப்பட்டாா். அவரது உடல் பின்னா் பிஜேஆா்எம் மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டு, அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

விபத்துக்கான காரணத்தை குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனா். சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.