சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு
வடக்கு தில்லி புகரில் உள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது நபா் கைது செய்யப்பட்டாா்.
வடக்கு தில்லி புகரில் உள்ள நரேலா பகுதியில் அமைந்துள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 31 வயது நபா் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: செக்டாா் ஏ-7 இல் உள்ள சிஎன்ஜி விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட வினித் குமாா் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டாா். பின்னா் அவா் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த நாட்டு கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
விசாரணையில், சிஎன்ஜி விற்பனை நிலையத்துடன் இருந்த தகராறு காரணமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அவா் தெரிவித்தாா். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.