முகப்பு
புதுதில்லி

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

மத்திய தில்லியில் உள்ள தனது வீட்டில் பூட்டப்பட்ட அறைக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் புதிதாக திருமணமான 19 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:17 AM
- கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

மத்திய தில்லியில் உள்ள தனது வீட்டில் பூட்டப்பட்ட அறைக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் புதிதாக திருமணமான 19 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டாா் என்று காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ஆனந்த் பா்பத் பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது, கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது கணவா் தப்பி ஓடி தலைமறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரைக் கைது செய்ய சிசிடிவி காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினா் மற்றும் அக்கம் பக்கத்தாரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement