முகப்பு
சென்னை

நாளை முதல் கடற்கரை - தாம்பரம் இரவு ரயில் ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.29) முதல் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

Updated On : 28 நவம்பர், 2023 at 8:04 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (நவ.29) முதல் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை (நவ.29) முதல் டிச.14-ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

Advertisement

இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.