மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 30 மாதங்களுக்குப் பிறகு 2026, ஏப்.16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக...
புது தில்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம், 2023 அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகளிா் இடஒதுக்கீடு தொடா்பான சட்டத் திருத்தங்கள் மீது வெள்ளிக்கிழமை(ஏப்.17) வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், 30 மாதங்களுக்குப் பிறகு 2026, ஏப்.16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
2023-இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மகளிருக்கான இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தாலும், தற்போதைய மக்களவையில் இது நடைமுறைக்கு வராது. அடுத்ததாக மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரே, இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். அதாவது 2034-ஆம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
Advertisement
Advertisement
Despite receiving Presidential assent in 2023, the reservation has not come into force. As per the official gazette, Article 334A of the Act stipulates that the reservation shall come into effect only after a delimitation exercise is undertaken using figures from the...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.