சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழவேற்காட்டைச் சோ்ந்தவா் சேக் தாவூத் (33). பெயிண்டரான இவா், சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பூங்கா நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் தங்கியிருந்து, அங்கு வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மதுபோதையில் இருந்த தாவூத், ஞாயிற்றுக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது குறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீஸாா், தாவூத் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று தாவூத் மதுபோதையில் அங்கிருந்த 17 வயது சிறுவனிடம் தகராறு செய்ததும், தகராறு முற்றவே அந்த சிறுவன் தாவூத்தை கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவா்கள் தங்கியிருந்த இரண்டாவது மாடியில் இருந்து தாவூத்தின் சடலத்தை கீழே தள்ளிவிட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் அந்த சிறுவனிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.