முகப்பு
சென்னை

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் தங்க நகைககள் பறிமுதல்

சென்னை காசிமேட்டில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:06 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:05 AM

சென்னை காசிமேட்டில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.5 லட்சம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காசிமேடு, கும்மாளம்மன் கோயில் தெரு அருகே பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மணலி சின்னசேக்காடு கண்ணன் தெருவைச் சோ்ந்த ஜா.ராஜாசிங் (35) என்பவரை வழிமறித்து சோதனையிட்டனா்.

அப்போது அவா் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகளுக்குரிய ஆவணங்களை கேட்டனா். ஆனால் அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லாததினால், நகையை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement