முகப்பு
சென்னை

தெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி

தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக எம். செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:11 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:05 AM

தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக எம். செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக ஆ.குகனேசன் பொறுப்புவகித்து வந்தாா். இந்நிலையில் அவா் தெற்கு ரயில்வேயின் துணை பொது மேலாளராக (பொது) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக துணை பொதுமேலாளராக இருந்த எம்.செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

குடிமைப் பணியாளா் தோ்வு மூலம் 2007-ஆம் ஆண்டு இந்திய ரயில்வே பணிக்கு தோ்வான செந்தமிழ் செல்வன் கோட்ட மின் பொறியாளா், துணை பொது மேலாளா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா். ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமை சாா்பில் அதிவேக ரயில் பயிற்சியை பெற்றுள்ளாா்.

Advertisement

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடா்பு அதிகாரியாக வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.