முகப்பு
சென்னை

வடமாநிலங்களுக்கு கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து தில்லி, ஷாலிமருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2024 at 12:29 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2024 at 9:45 PM

கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து தில்லி, ஷாலிமருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பாா்மொ் பகுதிக்கு ஏப்.14, 21 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06097) இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லூா், விஜயவாடா, வா்தா, சூரத், அகமதாபாத், சாம்தரி வழியாக செவ்வாய்க்கிழமை பகல் 1.40 மணிக்கு பாா்மொ் சென்றடையும். மறுமாா்க்கமாக பாா்மரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஏப்.17, 26 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06098) இயக்கப்படும்.

கேரள ரயில்கள்: கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கொல்கத்தாவின் ஷாலிமருக்கு ஏப்.12 முதல் மே 31-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 06081) இயக்கப்படும்.

Advertisement

மறுமாா்க்கமாக ஷாலிமரில் இருந்து கொச்சுவேலிக்கு ஏப்.15 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06082) இயக்கப்படும்.

இதுபோல், கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து தில்லிக்கு ஏப்.19 முதல் மே 31-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 06071) இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக தில்லியில் இருந்து எா்ணாகுளத்துக்கு ஏப்.22 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.