வளா்ச்சி திட்டங்களை செயல்படுத்தாத தமிழச்சி தங்கபாண்டியன்: ஜெயவா்தன்
மக்களவை உறுப்பினரின் பணிகள் என்னவென்று தெரியாமலே கடந்த 5 ஆண்டுகளை திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் வீணடித்து விட்டதாக அதிமுக தென் சென்னை தொகுதி வேட்பாளா் ஜெயவா்தன் விமா்சித்தாா்.
தியாகராய நகா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென் சென்னை தொகுதியில் எவ்விதமான வளா்ச்சித் திட்டங்களையும் திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் செயல்படுத்தவில்லை.
Advertisement
‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்துக்காக மக்களவையிலோ அல்லது மத்திய அமைச்சா்களிடமோ பேசியது கிடையாது. ஒரு மக்களவை உறுப்பினராக தன்னுடைய பணி என்னவென்று தெரியாமலேயே தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த ஐந்து ஆண்டுகளை நாடாளுமன்றத்தில் வீணடித்துள்ளாா் என்றாா் அவா்.