முகப்பு
சென்னை

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று இரண்டாம் கட்ட மறுபயிற்சி

Updated On : 13 ஏப்ரல், 2024 at 12:08 AM
பகிர்:

சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக சனிக்கிழமை இரண்டாம் கட்ட மறுபயிற்சி நடைபெறும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரு கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சனிக்கிழமை மறுபயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலா்கள் மீது தோ்தல் நடத்தை விதிகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments