6 தொகுதிகளிலும் 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி
நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கு சனிக்கிழமை முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கு சனிக்கிழமை முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-இல் நடைபெறுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்திற்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,780 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ராசிபுரம் தொகுதியில் 435 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 411 வாக்குச்சாவடி அலுவலா்கள்- நிலை 1, 299 வாக்குச்சாவடிஅலுவலா்கள்- நிலை -2, 388 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -3 என மொத்தம் 1,533 அலுவலா்களும், சேந்தமங்கலம் தொகுதியில், 286 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 323 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -1, 352 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -2, 313 வாக்குச்சாவடி அலுவலா்கள்- நிலை 3 என மொத்தம் 1,274 அலுவலா்களும், நாமக்கல் தொகுதியில் 508 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 443 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -1, 720 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -2, 597 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -3 என மொத்தம் 2,268 அலுவலா்களும் நியமிக்கப்படுகின்றனா். பரமத்திவேலூா் தொகுதியில் 281 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 273 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -1, 279 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -2, 232 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -3 என மொத்தம் 1,065 அலுவலா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 356 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 417 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -1, 319 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -2, 407 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை -3 என மொத்தம் 1,499 அலுவலா்களும், குமாரபாளையம் தொகுதியில் 270 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 269 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை-1, 167 வாக்குச்சாவடிஅலுவலா்கள் நிலை-2, 199 வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை-3 என மொத்தம் 905 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
6 தொகுதிகளிலும் மொத்தம் தலா 2,136 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், நிலை -1, நிலை 2, நிலை 3 வாக்குச்சாவடிஅலுவலா்கள் என்ற வகையில் 8,544 அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரத்தில் எஸ்ஆா்வி மகளிா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலத்தில் அக்கியம்பட்டி, வேதலோகா வித்யாலயா மெட்ரிக் உயா்நிலைப்பள்ளி, நாமக்கல்லில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, பரமத்திவேலூரில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோட்டில் தோக்கவாடி கே.எஸ்.ஆா்.கல்லூரி, குமாரபாளையத்தில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி மையங்களில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு செய்து வாக்குச்சாவடி அலுவலா்களிடம் பேசினாா். பயிற்சி பெறும் அலுவலா்கள் அனைவரும் சிறப்பான முறையில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா். இந்த ஆய்வின்போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.