முகப்பு
சென்னை

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 12:27 AM
பகிர்:

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை (ஏப்.20) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தாம்பரத்திலிருந்து ஏப்.20-ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06089) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06090) ஏப்.21-இல் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Advertisement

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments