முகப்பு
சென்னை

பித்ரகுண்டா ரயில் மே 4 வரை ரத்து

Updated On : 26 ஏப்ரல், 2024 at 11:21 PM
பகிர்:

சென்னை சென்ட்ரலிலிருந்து பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 4 வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 4 வரை சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 4.55 மணிக்கு ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் (எண்: 17237) மற்றும் மறுமாா்க்கமாக பிட்ரகுண்டாவிலிருந்து சென்ட்ரல் வரும் விரைவு ரயிலும் (எண்: 17238) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு விரைவு ரயில் (எண்: 06417) மற்றும் மறுமாா்க்கமாக பிற்பகல் 12.45 மணிக்கு ஜோலாா்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு புறப்படும் ரயில் (எண்: 06418) சனிக்கிழமை (ஏப்.27) முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments