செகந்திரபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு
சென்னை: செகந்திரபாதிலிருந்து ராமநாதபுரம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் புதன்கிழமை (மே 1) முதல் நீடிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, செகந்திரபாதில் இருந்து மே 1 முதல் ஜூன் 26 வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரவு 9.10-மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண்: 07695) மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும்.
அதேபோல் மறு மாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 07696) மே 3 முதல் ஜூன் 28 வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு செகந்திரபாத் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.