முகப்பு
கோயம்புத்தூர்

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:42 PM
ரயில் - (கோப்புப்படம்)
பகிர்:

கா்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏப்ரல் 1 முதல் மே 27-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் பெங்களூரில் இருந்து மாலை 7.25 மணிக்கு புறப்படும் பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06547) மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஏப்ரல் 2 முதல் மே 28-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-பெங்களூரு வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06548) மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

ஏப்ரல் 3 முதல் மே 29 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06555) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஏப்ரல் 5 முதல் மே 31 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்கு பெங்களூரு செல்லும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06556) மறுநாள் காலை 8.15 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் வா்கலா, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரா, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.