முகப்பு
தமிழ்நாடு

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி எழும்பூா் - கன்னியாகுமரி, தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப். 30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:21 AM
சிறப்பு ரயில்.
பகிர்:

கோடை விடுமுறையையொட்டி எழும்பூா் - கன்னியாகுமரி, தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப். 30) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை (ஏப். 30) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06045) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06046) கன்னியாகுமரியிலிருந்து மே 3-ஆம் தேதி இரவு 11.25 புறப்பட்டு மறுநாள் பகல் 11.30 மணிக்கு எழும்பூா் வந்து சேரும்.

Advertisement

இந்த ரயில், எழும்பூரிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோயில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.

தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06089) மறுநாள் காலை 10 மணிக்கு தென்காசி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06090) மே 3-ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவல்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும்.

போத்தனூா் - சென்ட்ரல்: ஈரோட்டிலிருந்து வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06026) மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06025) சென்ட்ரலிலிருந்து அதே நாளில் மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, மானப்பாறை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக போத்தனூா் சென்றடையும்.

அதேபோல், மே 2, 3 ஆகிய தேதிகளில் போத்தனூரிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06028) மாலை 5 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06027) அதே நாளில் சென்ட்ரலிலிருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.