முகப்பு
சென்னை

ரயில்களில் கட்டணமின்றி பயணம்: ஒரே நாளில் ரூ.3.5 லட்சம் அபராதம்

Updated On : 30 ஏப்ரல், 2024 at 7:33 PM
பகிர்:

சென்னை: ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.3.5 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் 264 புகா் ரயில்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் அதிரடியாக 160 டிக்கெட் பரிசோதகா்கள் கொண்ட குழுவினா் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை நடத்தினா்.

இதில் 1,300 போ் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டு அவா்களிடமிருந்து ரூ.3.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற டிக்கெட் பரிசோதனை 15 நாள்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். எனவே, ரயிலில் பயணிப்பவா்கள் உரிய பயணச் சீட்டுடன் பயணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.