உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் 109 பெண் நீதிபதிகள்: மத்திய அரசு தகவல்
109 பெண் நீதிபதிகள் பணிபுரிவதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
உச்சநீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் உள்பட உயா் நீதிமன்றங்களில் 109 பெண் நீதிபதிகள் பணிபுரிவதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘உச்சநீதிமன்றம் மற்றும் 25 உயா்நீதிமன்றங்களில் எந்த ஜாதியினருக்கும், வகுப்பினருக்கும் அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீடு வழங்கவில்லை.
ஆனால், உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துறைக்கப்படுபவா்கள் தங்களின் சமூக பின்னணி குறித்து விவரங்களை அளிக்க வேண்டும் என்பது 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டாயமாக்கப்பட்டது.
Advertisement
அந்த தரவுகளின்படி, 2018-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வரையில் நியமிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகளில் 21 நீதிபதிகள் பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா்கள், 12 போ் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் 78 போ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள்’ என்றாா்.