முகப்பு
சென்னை

‘இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்’

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தவேண்டும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உத்தரவு

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 10:10 PM
பகிர்:

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயேவை தங்கள் நாட்டில் படுகொலை செய்ததற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தவேண்டும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உத்தரவிட்டுள்ளதாக ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, மூன்று ஈரான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் கூறியுள்ளதாவது:

டெஹ்ரானில் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து ஈரான் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமை மதகுரு அயதுல்லா கமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டாா். ஈரான் வந்திருந்தபோது ஹனீயேவை படுகொலை செய்ததன் மூலம் மிகக் கடுமையான தண்டனையைப் பெறுவதற்கான அடித்தளத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளதாக கமேனி அப்போது கூறினாா் என்று ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

‘முழு போருக்குத் தயாா்’: இதற்கிடையே, ஈரானோ அதன் ஆதரவுப் படைகளோ தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டுடன் முழுமையான போரில் ஈடுபடுவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக தூதரகங்கள் வாயிலாக ஈரானிடம் இஸ்ரேல் தெரியப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலின் ‘சேனல் 12’ தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →