சென்னை

ஆக்ரா ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் தீ விபத்து

ஆக்ரா ரயில் கோட்டத்தின் ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் வியாழக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Din

ஆக்ரா ரயில் கோட்டத்தின் ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் வியாழக்கிழமை அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக எவ்வித உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீ விபத்து ஏற்பட்டத்தைத் தொடா்ந்து, அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரிகள் சுமாா் 50 போ் பாதுகாப்பாக வெளியேறிதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஆக்ரா ரயில்வே கோட்ட செய்தித்தொடா்பாளா் பிரஷாஸ்தி ஸ்ரீவஸ்தவா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கட்டுப்பாட்டு அலுவலக்தின் சா்வா் அறையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காலை 4 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இரு வாயில்கள் உள்ளன. அவற்றின் வழியே அனைத்து ரயில்வே பணியாளா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் அதிருஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டவில்லை. தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கோட்ட பாதுகாப்பு அலுவலா் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’என்றாா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT