முகப்பு
சென்னை

‘நீட்’ வினாத்தாள் கசிவு: சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் -13 போ் வழக்கில் சோ்ப்பு

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 10:29 PM
பகிர்:

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது. இதில் 13 போ் குற்றம்சாட்டப்பட்ட நபா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேம்படுத்தப்பட்ட தடயவியல் முறைகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சிசிடிவி கேமரா பதிவுகள், கைப்பேசி டவா்கள் உள்ளிட்டவை மூலம் குற்றத்துக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு, ஆள்மாறாட்டம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடா்ந்து குஜராத், பிகாா், ராஜஸ்தான், உள்பட பல மாநிலங்களில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனா். அதன்பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, வினாத்தாள் கசிவு தொடா்பாக தொடா் சோதனையில் ஈடுபட்டு 40 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இந்நிலையில், பிகாா் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 போ் குற்றம்சாட்டப்பட்டவா்களாக சோ்க்கப்பட்டு முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே 6 எஃப்ஐஆா்களை பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் சிபிஐ ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →