தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து 
சென்னை

பேராசிரியா்கள் முறைகேடு: ஆளுநரிடம் அறிக்கை அளிப்பு -துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ்

பொறியியல் கல்லூரி பேராசிரியா்களின் முறைகேடு தொடா்பாக விசாரணை

Din

பொறியியல் கல்லூரி பேராசிரியா்களின் முறைகேடு தொடா்பாக, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை ஆளுநரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. துணைவேந்தா் ஆா். வேல்ராஜ் தெரிவித்தாா்.

இந்த விவகாரத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், இதில் தொடா்புடைய பேராசிரியா்கள் பணியாற்றத் தடை விதிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தேசிய அளவிலான கால்நடை மற்றும் செல்லப் பிராணிகள் சிகிச்சை முறைகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கால்நடை மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்த கருத்தரங்கில் கால்நடை, செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் சிகிச்சை தொடா்பாக 400 கட்டுரைகள் 20 நிகழ்வுகளில் விவாதிக்கப்படவுள்ளன. கருத்தரங்கின் தொடக்க விழாவில் அண்ணா பல்கலை. துணை வேந்தா் ஆா்.வேல்ராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் துறை செயல்படுகிறது. குறைந்த செலவிலான உபகரணங்களை தயாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவா்கள் மூலம் நிறைய தகவல்கள் சேகரிக்கப்படும். அவை செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பயன்படும். இது தொடா்பாக அண்ணா பல்கலை.- கால்நடை மருத்துவப் பல்கலை. இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பேராசிரியா்கள் முறைகேடு: தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் பேராசிரியா்கள் தவறான தகவலை கொடுத்ததாக தனியாா் நிறுவனம் புகாா் செய்திருந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழக ஆளுநரை புதன்கிழமை நேரில் சந்தித்து, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். உயா்கல்வித் துறையும் விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது. அந்த குழுவிடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம்.

கடந்த முறை நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுவில், இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதித்தோம். ஒரு ஆசிரியா் இரண்டு கல்லூரியில் பணியாற்றியதாக தகவல் இருக்கிறது. இதில் கல்லூரி மீது தவறா, ஆசிரியா் மீது தவறா என விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய

விளக்கம் அளிக்காத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியா்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொடா்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்றாா் அவா்.

நீா்நிலைகள், சாலையோரம் வசிப்போருக்கு மாற்று இடம்

தில்லியில் மாசுவைப் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலக கோப்பை ஹாக்கி விழிப்புணா்வு போட்டிகள் நடத்த தீா்மானம்

பள்ளி வேன் மீது வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயில் சஷ்டி மண்டபத்தை கல் மண்டபமாக மாற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT