முகப்பு
சென்னை

இரட்டை கோபுரத் தாக்குதல் காலித் ஷேக் முகமதுடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம்

தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் முகமது மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் 2 பேருடன் அமெரிக்க அரசு வழக்குசாா் ஒப்பந்தம்

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 10:08 PM
பகிர்:

கடந்த 2001-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் முகமது மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் 2 பேருடன் அமெரிக்க அரசு வழக்குசாா் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அந்த ஒப்பந்தததின் கீழ், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை 3 பேரும் ஒப்புக் கொள்வாா்கள் என்றும் அதற்குப் பதிலாக மரண தண்டனையிலிருந்து அவா்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சுமாா் 3,000 பேரது உயிரிழப்புக்குக் காரணமான அந்தத் தாக்குதல் தொடா்பான வழக்குகளில் வாக்குமூலங்கள் சித்தரவதை மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்பது போன்ற காரணங்களால் 20 ஆண்டுகளுக்கும் மேல் இழுபறி நீடித்துவருகிறது. எனவே, வழக்குகளை முடிப்பதற்கான அரசின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →