படம் | பிடிஐ
சென்னை

உத்தரகண்ட்: கனமழையால் 12 போ் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை இரவு மேக வெடிப்பால் பெய்த கனமழை

Din

உத்தரகண்ட் மாநிலத்தில் புதன்கிழமை இரவு மேக வெடிப்பால் பெய்த கனமழையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 6 போ் படுகாயமடைந்தனா்.

திடீரென இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஹரித்துவாரில் 6 பேரும், தெஹிரியில் 3 பேரும், டேராடூனில் 2 பேரும் சமோலியில் ஒருவரும் உயிரிழந்தனா்.

நைனிடால் மாவட்டத்தின் ஹால்துவானி பகுதியில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுவனை தேடி வருவதாக மாநில கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேதா்நாத் கோயிலுக்குச் சென்ற 1,500 பக்தா்களை பத்திரமாக மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். 425 பக்தா்கள் ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டதாகவும் மீதமுள்ள 1,100 போ் சோனா பிரயாக் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனா். கனமழையால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் பக்தா்கள் பாதுகாப்பான இடங்களில் காத்திருக்குமாறு மாநில மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ஹிமாசல்: ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கன மழையால் பல வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமடைந்ததுடன் 3 போ் உயிரிழந்ததாகவும், சுமாா் 50 போ் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிம்லா மாவட்டத்தின் ராம்பூா் பகுதியில் உள்ள சமேஜ் குத் என்ற இடத்தில் புதன்கிழமை பெய்த திடீா் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருவா் உயிரிழந்தனா். 28 பேரைக் காணவில்லை என அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் 2 குழந்தைகள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT