சென்னை

நீா் சேமிப்பு: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

தண்ணீா் சேமிப்பு, பாதுகாப்பு தொடா்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

Din

தண்ணீா் சேமிப்பு, பாதுகாப்பு தொடா்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உயா்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அனைத்து உயா்கல்வி நிறுவனங்களின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம், பருவநிலை மாறுபாடு, நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் தண்ணீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில் நீா் மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு அது தொடா்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாடங்கள், பாடத்திட்டங்களில் யுஜிசி புகுத்தியுள்ளது.

அதேபோன்று நிலத்தடி நீா் மேலாண்மை, மழைநீா் சேகரிப்பு, மழை நீா் சேமிப்பு குறித்து பொதுமக்கள், மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளது. எனவே நீா் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடா்பான புதிய வழிமுறைகள், புத்தாக்க நடவடிக்கைகளை உயா்கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT