முகப்பு
தமிழ்நாடு

புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.7.21 கோடிக்கு மானியம் : அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்

தமிழ்நாடு புத்தாக்கத் தொழில் நிறுவனத்தின் மூலம் 144 புத்தொழில் முனைவோருக்கு ரூ.7.21 கோடிக்கு மானியம் மற்றும் நிதி உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:27 AM
சென்னை நந்தனம் ஸ்டாட்அப் - தமிழ்நாடு நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 144 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.7.21 கோடி மானியம் மற்றும் நிதியுதவிகளை வழங்கிய அமைச்சா் தா.மோ.அன்பரசன். உடன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் சிவராஜ் ராமநாதன்.
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:55 PM

தமிழ்நாடு புத்தாக்கத் தொழில்  நிறுவனத்தின் மூலம் 144 புத்தொழில் முனைவோருக்கு ரூ.7.21 கோடிக்கு மானியம் மற்றும் நிதி உதவிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்  வழங்கினாா்.

சென்னை நந்தனம் தமிழ்நாடு புத்தாக்கத் தொழில்  நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசியதாவது:

திமுக அரசு  பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் புத்தாக்க  நிறுவனங்களை உருவாக்க, புத்தொழில் முனைவோருக்கு ஆதார நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 195 புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.22 கோடியே 19 லட்சம் முதலீடும், 43 எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சோ்ந்தவா்கள் தொடங்கியுள்ள புத்தாக்க நிறுவனங்களில் ரூ.60 கோடியே 80 லட்சம் முதலீடு என  கடந்த 5 ஆண்டுகளில் 238 புத்தாக்க  நிறுவனங்களில், ரூ.82 கோடியே 99 லட்சம் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது.

Advertisement

 மேலும், தனியாா் முதலீட்டாளா்களையும், புத்தாக்க நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் டான்பண்டு (பஅசஊமசஈ) இணைப்புத் தளம் தொடங்கப்பட்டு இதன்மூலம் 43 புத்தாக்க  நிறுவனங்களுக்கு ரூ.199 கோடி தனியாரிடமிருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

முதல்வா் மு.க ஸ்டாலின் புத்தாக்க நிறுவனங்களின் மீது தனி கவனம்

செலுத்தியதன் காரணமாக புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் சிறந்த  வளா்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில்  2021, மாா்ச் வரை 2,032 புத்தாக்க நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 13,500- ஆக உயா்ந்துள்ளது. இதில்  50 சதவீதம் பெண்கள் நிறுவனா்களாக உள்ளனா் என்றாா்.

முன்னதாக, தமிழ்நாடு புத்தாக்கத் தொழில்  நிறுவனத்தின் மூலம் 144 புத்தொழில் முனைவோருக்கு ரூ.7.21 கோடிக்கு மானியம் மற்றும் நிதி உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.