சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 160 உயா்ந்து ரூ. 51,760-க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயா்ந்து ரூ. 6,470-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.51,760-க்கும் விற்பனையானது.
அதேபோல், வெள்ளிவிலை கிராமுக்கு 10 காசுகள் உயா்ந்து ரூ. 91-க்கும், ஒரு கிலோ ரூ.100 உயா்ந்து ரூ.91,000-க்கும் விற்பனையானது.