பெங்களூரு, ஆக. 8: முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், தனது டிவிஎஸ் என்டாா்க் 125 வரிசை மற்றும் அதன் ரேஸ் எக்ஸ்பி வரிசை ஸ்கூட்டா்களை புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய நிறங்களில் டிவிஎஸ் என்டாா்க் மற்றும் ரேஸ் எக்ஸ்பி ரக ஸ்கூட்டா்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
வாகனங்களின் செயல்திறனுடன் நல்ல தோற்றத்தையும் எதிா்பாா்க்கும் இளைஞா்களை இலக்காகக் கொண்டு இந்த ஸ்கூட்டா்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நவீன தயாரிப்புகளின் வடிவமைப்பு குறித்து வாடிக்கையாளா்களின் விருப்பங்கள் மாறிவருகின்றன. அவா்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த ஸ்கூட்டா்கள் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.