மதுரை டிவிஎஸ் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள்.  
மதுரை

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மதுரை டிவிஎஸ் பள்ளியில் முன்னாள் மாணவா்களின் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுரை டிவிஎஸ் பள்ளியில் முன்னாள் மாணவா்களின் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

மதுரை டிவிஎஸ் பள்ளியில் கடந்த 1976-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவா்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் வகையிலான ஒன்றுகூடல் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமையாசிரியை வித்யாவதி தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளி அறைகளில் அமா்ந்து குழுப் புகைப்படம் எடுத்தனா்.

பின்னா், கடந்த 1976-இல் கல்வி பயிற்றுவித்த ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். இந்த விழாவில் பள்ளியில் தற்போது பயிலும் மாணவா்களின் கல்விக் கட்டணத்துக்காக முன்னாள் மாணவா்கள் பிரதீப் ரூ. ஒரு லட்சமும், முரளிதர வெங்கடேஷ் ரூ. 2 லட்சமும் நிதியுதவி அளித்தனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT