சென்னை

15-இல் புச்சிபாபு அகில இந்திய கிரிக்கெட் போட்டி தொடக்கம்

Din

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சாா்பில் அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வரும் 15-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 11-ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக டிஎன்சிஏ செயலாளா் ஆா்.ஐ. பழனி வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பழைமையான கிரிக்கெட் போட்டிகளில் புச்சிபாபு கிரிக்கெட் போட்டி ஒன்றாகும். நடப்பாண்டு திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் இப்போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும்.

முதல் அரையிறுதி திருநெல்வேலியிலும், இரண்டாவது அரையிறுதி நத்தத்திலும் நடைபெறும். இறுதி ஆட்டம் நத்தத்தில் நடைபெறுகிறது.

ரஞ்சி கோப்பை ஆட்டமுறை இதில் பின்பற்றப்படும். சாம்பியன் அணிக்கு ரூ.3 லட்சம், ரன்னா் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசாக தரப்படும்.

டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன், டிஎன்சிஏ லெவன் அணிகள் உள்பட 10 மாநில அணிகளும் பங்கேற்கவுள்ளன என்றாா் பழனி.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT