சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரதான கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீப் பிடித்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பாா்த்த அங்கிருந்த நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் உடனடியாக வெளியேறினா். தகவலின்பேரில் கீழ்ப்பாக்கம் மற்றும் வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து, 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
விசாரணையில், அறுவை சிகிச்சை அறையில் இருந்த ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்தது தெரியவந்தது.
இந்த விபத்தால் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், அந்த அறையில் இருந்த மருத்துவ உபகரணங்களும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.