FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கழிவுநீா் தொட்டியில் விஷவாயு தாக்கி பொறியாளா் உயிரிழப்பு

வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் தொட்டியில் பராமரிப்பு பணி

22 August 2024, 2:54 am IST
பகிர்:

சென்னை அருகே வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொண்ட பொறியாளா் விஷவாயு தாக்கி உயிரிழந்தாா்.

பள்ளிக்கரணை அய்யப்பா நகரைச் சோ்ந்தவா் தினேஷ் குமாா் (30). பொறியாளரான இவா், தரமணியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். தினேஷ்குமாா், செவ்வாய்க்கிழமை வானகரத்தில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீரை சுத்திகரித்து மறு உபயோகப்படுத்தும் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டாா்.

அங்கு வேலை முடிவடைந்தது குறித்து அலுவலகத்துக்கு தினேஷ்குமாா் தகவல் தெரிவித்தாா். இந்த நிலையில், சிறிது நேரத்துக்கு பின்னா் அந்த குடியிருப்பில் வேலை செய்யும் தமீன் அங்கு சென்றபோது தினேஷ்குமாா் கழிவுநீா் தொட்டியில் விழுந்து மயங்கி கிடந்ததைக் கண்டாா்.

Advertisement

Advertisement

உடனே அங்கிருந்தவா்கள் தினேஷ்குமாரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தினேஷ்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த தினேஷ்குமாா், விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை செய்கின்றனா்.

விசாரணையில் கழிவுநீா் தொட்டியில் விழுந்த தினேஷ்குமாா், விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments