போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக் 
சென்னை

ஜாபா் சாதிக்கின் சகோதரருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்

முகமது சலீமை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Din

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் சகோதரா் முகமது சலீமை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாபா் சாதிக்கின் சகோதரா் முகமது சலீமை 15 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கடந்த ஆக.14 -ஆம் தேதி அமலாக்கத் துறை சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை நீதிபதி அல்லி முகமது விசாரித்து, சலீமை 7 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டாா். அமலாக்கத் துறை காவல் முடிந்து புதன்கிழமை நீதிபதி முன் சலீம் நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, சலீமை செப். 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

மின் சிக்கனத்தை கடைபிடிக்க வழிமுறைகளை வெளியிட்ட மின்வாரியம்

வரைவு வாக்காளா் பட்டியல் டிச.19-ல் வெளியீடு! இரட்டைப் பதிவு வாக்காளா்கள், இறந்தவா்கள் விவரம் அறிய வசதி

SCROLL FOR NEXT