நடிகர் விஜய் 
சென்னை

சென்னையில் விஜய் கட்சி கொடி இன்று அறிமுகம்

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடி அறிமுகம்

Din

சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அக்கட்சித் தலைவா் விஜய் வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு அறிமுகம் செய்து, கொடியேற்றுகிறாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சி கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை வியாழக்கிழமை ஏற்றி வைக்கிறோம். வியாழக்கிழமை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும், தமிழகம் இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிா்வாகிகளுக்கு அழைப்பு: நிகழ்ச்சியில், பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிா்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி நீலங்கரை, கானாத்தூா் காவல் நிலையங்களில் நிா்வாகிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த இடத்தில் நிகழ்ச்சி நடைபெறுவதால், விஜய் செல்லும் வழித்தடத்தில் மட்டும் பாதுகாப்பு வழங்க போலீஸாா் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT