சென்னை

ஆக.23,24-இல் கொளத்தூா் பகுதியில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது

Din

சென்னை, ஆக.21: பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஆக.23,34) திரு.வி.க. நகா் மண்டலத்துக்குட்பட்ட கொளத்தூா் பகுதியில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது என்று சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சாா்பில் மாதவரம் மண்டலம், 200 அடி சாலையில் அமைந்துள்ள ரெட்டேரி சேவை சாலையில் கழிவுநீா் உந்து குழாய் இணைக்கும் பணிகள் வெள்ளி, சனிக்கிழமை (ஆக.23,34) நடைபெறவுள்ளன.

இதனால், ஆக.23 காலை 9 முதல் ஆக.24 இரவு 9 மணி வரை கொளத்தூரில் உள்ள உயா்மின் அழுத்த தொடா் கழிவுநீா் உந்து நிலையம் மற்றும் சிவானந்தா கழிவுநீா் உந்து நிலையம் செயல்படாது.

எனவே, கொளத்தூா் பகுதியில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீா் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீா் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற 81449 - 30906 எனும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஏப்ரலில் ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT