சென்னை திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்துமிடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளா் எஸ். சதீஷ் பிரபு . 
சென்னை

திருமங்கலம் மெட்ரோ: கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

Din

சென்னை: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்தும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

ஏற்கெனவே திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் 1,100 இரு சக்கர வாகனங்களை நிறுத்த வசதி உள்ளது. தற்போது தொடங்கப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் மேலும் 450 இரு சக்கர வாகனங்கள், 25 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்த முடியும்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளா் எஸ்.சதீஷ் பிரபு (தொடா்வண்டி மற்றும் இயக்கம்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயா் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT