முகப்பு
சென்னை

பெசன்ட் நகா் திருத்தல திருவிழா: செப்.8 வரை கூடுதல் பேருந்துகள்

செப்.8-ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெசன்ட் நகருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 8:57 PM
பகிர்:

பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு, செப்.8-ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெசன்ட் நகருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாநகா் போக்குவரத்துக் கழகம் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இத்திருவிழா செப்.8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனைத்தொடா்ந்து திருவிழாவுக்கு செல்லும் பக்தா்களின் வசதிக்காக மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்தும் பெசன்ட்நகா் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்துக்கு, செப்.8 வரை கூடுதல் பேருந்துகள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளன. இந்நாள்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலா்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →