கோப்புப் படம் 
சென்னை

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் விமானம் தரையிறக்கம்

சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்ட விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

Din

சென்னை: சென்னையிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்ட விமானம், நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு 155 பயணிகளுடன் ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ்’ தனியாா் விமானம் திங்கள்கிழமை காலையில் புறப்பட்டுச் சென்றது.

நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி உடனடியாக தகவல் அனுப்பினாா். இதையடுத்து, அதிகாரிகள் உத்தரவின்படி, ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ்’ விமானம் காலை திங்கள்கிழமை 7.15-க்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா்.

பின்னா் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் விமான பொறியாளா் குழுவினா் ஈடுபட்டனா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

SCROLL FOR NEXT