சென்னை மாநகரப் பேருந்து பயணிகள் கவனத்திற்கு...
சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுகள் தற்காலிகமாக வழங்கப்படாது....
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுகள் தற்காலிகமாக வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.
Advertisement
Advertisement
பிரச்னை சரிசெய்யப்படும் வரை அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஒன் செயலி சீராக செயல்படுகிறது என்றும் பயணிகள் இந்த செயலி மூலம் பேருந்து பயணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
It has been reported that due to a technical glitch, tickets will temporarily not be issued through electronic ticket machines on Chennai city buses.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.