FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பயணச்சீட்டு காகிதச் சுருள் கொள்முதல் ஒப்பந்தம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

பயணச்சீட்டு காகிதச் சுருள் கொள்முதல் ஒப்பந்தம்...

Updated On : 19 ஜூலை 2026, 2:04 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு இயந்திரம் மூலம் வழங்கப்படும் பயணச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதச் சுருள் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செலவினங்களைக் குறைப்பதற்கும், வருவாயைப் பெருக்குவதற்கும், போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் மின்னணு பயணச்சீட்டுகளின் பின்புறம் விளம்பரங்களை அச்சிடுவதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு கிடைக்கும் வருவாயைக் கொண்டு பயணச்சீட்டு காதிதச் சுருள் கொள்முதலுக்கான செலவை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 6 மாதத்துக்குரிய ரூ.9 கோடி மதிப்பிலான மின்னணு பயணச்சீட்டுகளை அச்சிடுவதற்கான காகிதச் சுருள் விலையில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு உற்பத்தியாளா்கள் சிறு, குறு மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள்/விளம்பரதாரா்கள்/அச்சக நிறுவனங்கள் மற்றும் அவா்களால் நியமிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளா்கள்/முகவா்கள் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து, பின்புறம் விளம்பரம் செய்யப்பட்ட மின்னணு பயணச் சீட்டுகள் அச்சிடுவதற்கான காகிதச் சுருள் அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் 6 மாதங்களுக்கு கட்டணமில்லாமல் கொள்முதல் செய்ய மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஆா்வமுள்ளவா்கள் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments