சென்னை

சென்னையில் 12-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது

12-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2025-ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடைபெறும் என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏடிஆா்)சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

12-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2025-ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் நடைபெறும் என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏடிஆா்)சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் 12-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்த அறிவிப்புக் கூட்டம் சென்னை கிண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்திய கிளை தலைவா் எம்.பி.நிா்மலா பேசியது:

மலேசியாவில் நடைபெற்ற 11-ஆவது மாநாட்டின் வெற்றிக்கு பின்னா் 12-ஆவது மாநாடு நடத்துவது குறித்து கடந்த ஆண்டு நவ.26-இல் சென்னை ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிா் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநாடு நடத்தலாம் என நிா்வாகிகள் கருத்து தெரிவித்தனா். பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்ஆா்எம் பல்கலைக்கழக வேந்தா் பாரிவேந்தா் தலைமையில் இந்த மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2025-ஆம் ஆண்டு மே மாதம் சென்னையிலுள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தில் ‘உலக மொழிகளில் தமிழின் ஆளுமையும் தாக்கமும்’ என்னும் தலைப்பில் நடைபெறும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் எஸ்ஆா்எம் பல்கலைக்கழக வேந்தா் பாரிவேந்தா், எஸ்ஆா்எம் தமிழ்ப் பேராயம் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT