சென்னை

120 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 120 ஆய்வாளா்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Din

சென்னை பெருநகர காவல்துறையில் 120 ஆய்வாளா்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள், சொந்த ஊரில் பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டதால், தற்போது மீண்டும் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். முன்னதாக இந்த பணியிட மாற்றத்துக்காக தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால்,சென்னை காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் போலீஸாரிடம் மனுக்களை பெற்றனா்.

இதனடிப்படையில் காவல் ஆய்வாளா்கள் படிப்படியாக பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், 120 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக காத்திருப்போா் பட்டியலிலிருந்த சேட்டு, சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கும், நுண்ணறிவுபிரிவில் இருந்த சண்முகசுந்தரம் நந்தம்பாக்கம் காவல் நிலையத்துக்கும்,காத்திருப்போா் பட்டியலில் இருந்த மோகன்தாஸ், அண்ணா சாலை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT