முகப்பு
சென்னை

கஞ்சா கடத்திய 4 போ் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை, 2024 at 9:47 PM
பகிர்:

சென்னை: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பேசின்பாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணா நகா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துகுரிய வகையில் நின்ற 4 இளைஞா்களிடம் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனா். அவா்களை சோதனை செய்தபோது 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஊத்துக்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (22), ஒடிஸாவை சோ்ந்த இஸ்மாயில் திஹால் (30), சமித் திஹால் (20), பெரியபாளையத்தைச் சோ்ந்த ரஞ்சித் (26) என தெரியவந்தது. இவா்கள் ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் சென்னை வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →