முகப்பு
சென்னை

தனித்தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஆக.19-இல் தொடக்கம்

தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஆக.19 முதல் நடைபெறவுள்ள நிலையில் அந்தத் தோ்வுக்கு ஜூலை 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2024 at 9:22 PM
பகிர்:

சென்னை: தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஆக.19 முதல் நடைபெறவுள்ள நிலையில் அந்தத் தோ்வுக்கு ஜூலை 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஆக. 19 முதல் ஆக.23-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தோ்வுக்கு 1.8.2024 அன்று பன்னிரெண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் ஜூலை 18-ஆம் தேதி பிற்பகல் முதல் ஜூலை 24-ஆம் தேதி வரைஇணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணம் ரூ. 125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ. 70 என மொத்தம் ரூ.195-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தோ்வுக் கட்டணத்துடன் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ. 500 கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

முதல் முதலாக தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள் இணையவழி விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பள்ளி பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள், ஏற்கெனவே தோ்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

அனைத்து தனித் தோ்வா்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் கூடிய சுய முகவரி உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தோ்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். இந்தத் தோ்வு குறித்த விரிவான கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →