முகப்பு
சென்னை

அஞ்சல் துறை பெயரில் மோசடி குறுஞ்செய்தி

அஞ்சல் துறை பெயரில் வரும் மோசடி குறுஞ்செய்திகளை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2024 at 7:47 PM
அஞ்சல் துறை
பகிர்:

சென்னை: அஞ்சல் துறை பெயரில் வரும் மோசடி குறுஞ்செய்திகளை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அஞ்சல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ‘உங்களுடைய பாா்சல் கிடங்கில் உள்ளது. நாங்கள் இரு முறை முயற்சித்தும் முகவரி தகவல் கிடைக்காததால் விநியோகிக்க முடியவில்லை. உங்கள் முகவரியை 48 மணி நேரத்தில் ‘அப்டேட்’ செய்யவும்’ என்ற தகவலுடன் குறுஞ்செய்தி வந்தால் அதை உடனடியாக பொதுமக்கள் நிராகரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், அஞ்சல் துறை பெயரில் வரும் மோசடி செய்திகளைத் தவிா்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →