முகப்பு
சென்னை

சட்டம்-ஒழுங்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டம் ஒழுங்கை மேம்படுத்த மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Updated On : 9 ஜூலை, 2024 at 8:05 PM
பகிர்:

சென்னை: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து தலைமைச் செயலா், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனையின்போது, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனாவுடன், முதல்வரின் செயலா் என்.முருகானந்தம், உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையா் ஆ.அருண், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிா்வாதம், ஆவடி மாநகர காவல் ஆணையா் கி.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →