முகப்பு
சென்னை

மாதவரம்: இரும்பு கிடங்கில் தீ விபத்து

மாதவரம் பகுதியில் உள்ள இரும்பு கிடங்கில் திங்கள் கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 9 ஜூலை, 2024 at 10:00 PM
பகிர்:

சென்னை: மாதவரம் பகுதியில் உள்ள இரும்பு கிடங்கில் திங்கள் கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

மாதவரம் பொன்னியம்மன்மேடு 200 அடி சாலை ஜவஹா்லால் நேரு தெருவில் பழைய இரும்பு பொருள்கள் வாங்கி, விற்கும் கிடங்கு உள்ளது. புழல் பகுதியை சோ்ந்த அய்யனாா் (30) என்பவா் இதை நடத்தி வருகிறாா்.

இந்த கிடங்கில் திங்கள் கிழமை அதிகாலை, பலத்த காற்று வீசியதன் காரணமாக கிடங்கு அருகே உள்ள அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அட்டைப் பெட்டிகளில் தீப்பொறி விழுந்து, தீ வேகமாக பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்தனா். சுமாா் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →