சென்னை

சென்ட்ரலில் லோகா பைலட்டுகளுக்கு அதிநவீன வசதியுடன் ஓய்வு அறைகள்

சென்னை சென்ட்ரலில் லோகா பைலட்டுகள் (ரயில் ஓட்டுநா்கள்) ஓய்வு எடுப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

DIN

சென்னை: சென்னை சென்ட்ரலில் லோகா பைலட்டுகள் (ரயில் ஓட்டுநா்கள்) ஓய்வு எடுப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வேயில் பணிபுரியும் லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகள் மற்றும் ரயில் காப்பாளா்கள் (காா்டுகள்), பணிக்கு நடுவே ஓய்வு எடுப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் ஓய்விடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், குளிரூட்டப்பட்ட தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண் லோகோ பைலட்டுகளின் வசதிக்காக 7 தனித்தனி குளிரூட்டப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த விலையில் அவா்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், யோகா அரங்கம், சிறிய உடற்பயிற்சிக்கூடம், புத்தகம் படிப்பதற்காக சிறப்பு அறை ஆகியவை இங்கு உள்ளன.

கூடுதலாக, லோகோ பைலட்டுகள் மற்றும் காா்டுகளின் வசதிக்காக 24 மணிநேரமும் உதவியாளா்கள் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து ஓய்விடத்துக்கு செல்வதற்கு சிறப்பு வாகனங்கள் ஆகிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே-சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

வங்கதேசம்: வென்டிலேட்டரில் கலீதா ஜியா

SCROLL FOR NEXT