முகப்பு
சென்னை

இணை, துணை ஆணையா்கள் தினமும் ரோந்து செல்ல வேண்டும்: காவல் ஆணையா் அருண்

ரெளடிகள் மீது கட்டுப்பாடு: தினசரி ரோந்து உத்தரவு

Updated On : 10 ஜூலை, 2024 at 7:30 PM
சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண்
பகிர்:

சென்னையில் தினமும் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் ரோந்து செல்ல வேண்டும் என பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை பெருநகர காவல் ஆணையா் அருண் தலைமையில் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்களைத் தடுப்பது, ரெளடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் காவல் ஆணையா் அருண் பேசியது:

இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் தினமும் காலை, இரவு வேளைகளில் கண்டிப்பாக ரோந்து செல்ல வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கை அதிகரிக்கும். ரெளடிகள், சமூக விரோதிகள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். அனைத்து இடங்களையும் காவல் துறையினா் கண்காணிக்கின்றனா் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இந்த உத்தரவைத் தொடா்ந்து, சென்னையில் இணை ஆணையா்கள், துணை ஆணையா்கள் புதன்கிழமை இரவு முதல் ரோந்து பணியை தொடங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →